தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 25, 2021, 1:40 PM IST

1. வன்னியர் இடஒதுக்கீடு - தடை விதிக்க மறுப்பு

கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க தற்காலி தடை விதிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. பொறியியல் படிப்பில் சேர கூடுதல் விண்ணப்பம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி விவரங்களையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

3. தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றிலிருந்து அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4. கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் உரிய பதிலை அளித்துள்ளார்.

5. ’தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் கேப்டன்’ - முதலமைச்சர் வாழ்த்து

தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6. 'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்

பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

7. உதவித்தொகை தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்துக - சு.வெங்கடேசன் எம்பி

KVPY திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

8. பாரா ஒலிம்பிக்: சோனல்பென் மதுபாய் படேல் தோல்வி

பாரா ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 25) பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.

9. நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

நடிகர் ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

10. HBD விஜயகாந்த் - யாரையும் மூழ்கடிக்காத கேப்டன்

எதையும், யாரையும், யார் உதவி செய்ததையும் நினைவில் வைத்துக்கொள்ளாமல் கடந்து ஓடும் வேகமான உலகத்துக்குள் விஜயகாந்த் நிதானமாக நடந்தார். அவர் அப்படி நடந்ததால்தான் அவரது கைகளை பலரின் கைகள் பற்றின. இன்னமும் விடாமல் இருக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details