தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 8, 2021, 1:11 PM IST

1. மேகதாது அணை - சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் அறிவுரை

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2. எல். முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ஒன்றிய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3. மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - 13ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக முதலமைச்சரை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி அம்மாநில முதலமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் அறிவித்துள்ளார்.

4. மீண்டும் வைகையில் நீர் ஓடும் - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் வைகையில் நீர் ஓடும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

5. மேகதாது அணை விவகாரம் - காங்கிரஸ் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

6. ஸ்டெர்லைட் ஆலை மூடுவது எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

கரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7. மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாகப் பயன்படுத்திய விவசாயிக்கு உதவிய திமுகவினர்!

திருத்தணி அருகே வறுமையின் காரணமாக தனது மகனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்துவது குறித்து செய்தி வெளியானதையடுத்து, தமிழ்நாடு நிதி அமைச்சர் உத்தரவின்பேரில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளர் சிறுவனுக்கு சைக்கிள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

8. சென்னையில் 2000-க்கும் கீழ் குறைந்த கரோனா

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2000-க்கும் கீழ் குறைந்து 1776-ஆக உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

9. இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10. யூரோ கால்பந்து தொடரையும் விட்டு வைக்காத 'வலிமை' அப்டேட்!

யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்தில் ரசிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details