தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

1 PM
1 PM

By

Published : Apr 15, 2021, 1:02 PM IST

1. ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் - தமிழ்நாடு அரசு

ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மே 17ஆம் தேதிமுதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!

செய்முறைத் தேர்வுகள் நாளை துவங்க உள்ள நிலையில், பள்ளிகளின் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். அதேபோல் மாணவர்கள் பயன்படுத்தும் ஆய்வகத்தில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ததுடன், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

3. கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளின் மத்தியில் சுற்றுலா வாகனங்கள் சிக்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

4. தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசென்ற ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்!

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலையை ஒற்றை காட்டு யானை கடந்துசென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

5. ஸ்ரீ முத்தாட்சி அம்மன் கோயில் திருவிழா!

நாகை: மயிலாடுதுறையில் ஸ்ரீமுத்தாட்சி அம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி நடன ஐதீக திருவிழா கரோனா கட்டுப்பாட்டால் எளிமையாக நடைபெற்றது.

6. திருவள்ளூர் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி காதலியை ஏமாற்றிய இளைஞர்!

திருவள்ளூர்: காதலித்து திருமண ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த இளைஞர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

7. மதுபாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு குட்டி: மயக்கமடைந்த விவசாயி

அரியலூர்: உடையார்பாளையம் அருகே பாம்பு குட்டி இறந்த நிலையில் இருந்த மது பாட்டிலின் மதுவை குடித்த விவசாயி மயக்கமடைந்தார்.

8. ’மேற்கு வங்கத்தை அடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தை அழிக்கும் பாஜக’

கொல்கத்தா: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதன்முறையாக மேற்கு வங்கத்தின் கோவல் போக்கர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

9. ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ஹர்ஷ் வர்தன்

டெல்லி: ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

10.பாகிஸ்தான் படகை மடக்கிய இந்திய கடலோரக் காவல் படை: 30 கிலோ ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: ஜாகாவ் கடற்கரை அருகே பாகிஸ்தான் மீன்பிடி படகிலிருந்து 30 கிலோ ஹெராயினை கடலோரக் காவல் படையும், ஏ.டி.எஸ். படையும் பறிமுதல்செய்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details