தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

1 PM
1 PM

By

Published : Apr 8, 2021, 1:02 PM IST

1. 'அதிமுகவின் அறிவிப்பால் எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்' - ஈஸ்வரன்

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதிமுக தலைவர்களின் அறிவிப்பு எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2. 'தலைக்கு தில்ல பாத்தியா' - மூங்கில் கிளையை வளைத்து சாலையின் நடுவே நின்ற யானை

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று சாலையின் நடுவே நின்றபடி மூங்கில் கிளையை வளைத்துச் சாப்பிடும் காணொலி வெளியாகியுள்ளது.

3. பிரிந்தது உயிரல்ல உடல்தான் - இசை முரசு நினைவுநாள்

’இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’... இந்த வரிகளை பகுத்தறிவாளர்களைக் கூட முணுமுணுக்கச் செய்ததற்குக் காரணம் அதைப் பாடிய காந்தக் குரலோன் ’இசை முரசு’ நாகூர் ஹனிபா. அவர் நினைவுநாளான இன்று, அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு.

4. எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை வேண்டும்- உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5. கோயில் நிலத்தை விற்ற விவகாரம்: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

சென்னை: கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோயில் சொத்துகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. துரைமுருகனுக்கு கரோனா?

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7. 'மறக்க முடியாத தருணம்' - பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்வில் செவிலியர்!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திய பஞ்சாபைச் சேர்ந்த செவிலி சர்மா, இது மறக்க முடியாத தருணம் எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

8. ஹைதராபாத் செல்கிறார் 'அண்ணாத்த' ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார்.

9. நீருக்குள் சாகசம்: இணையத்தைப் புரட்டிப்போட்ட நீச்சல் வீராங்கனை!

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை கிறிஸ்டினா மகுஷென்கோ, சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப ஜிம்னாஸ்டிக் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

10. 'முதலை ஷாப்பிங் வந்திருக்கா?' - தாய்லாந்து கடையைக் கதிகலங்க வைத்த நிகழ்வு

பாங்காக்: தாய்லாந்தில் மிகப்பெரிய உருவம்கொண்ட உடும்பு ஒன்று, சிறப்பு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details