தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 PM
1 PM

By

Published : Feb 24, 2021, 1:09 PM IST

1. 'பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெற பாடுபட்டவர் ஜெ.!' - பிரதமர் மோடி புகழாரம்!

நாட்டில் பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்காகப் பெரும் பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

2. சட்டப்பேரவைத் தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா

சென்னை: ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

3. 'அதிமுகவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்' - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

சென்னை: ஜெயலலிதா காட்டிய லட்சியப்பாதை விரிந்து கிடக்கிறது. அதில், அதிமுகவின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4. முழுமையாக காவி சாயத்தைப் பூசிக்கொள்கிறதா 'அண்ணா' திமுக?

பாஜகவின் கைப்பாவையாகத்தான் அதிமுக இருக்கிறது என்று பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கும் வேளையில் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு தலைமைக் கழகம் எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அதனை அதிமுக உறுதிப்படுத்திவிட்டதோ என்ற முணுமுணுப்பும் கட்சிக்குள் கேட்கிறது.

5. 1971 போர் வெற்றியைப் பறைசாற்றும்வகையில் விமான படையின் சாகசம்!

சென்னை: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றிபெற்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததைக் கொண்டாடும்விதமாக இந்திய விமான படையின் சூரியகிரண் குழு 'நம்ம சென்னை' பெயர்ப் பலகைக்கு மேலே பறந்து சாகசத்தில் ஈடுபட்டது.

6. புதுச்சேரிக்கு வருகைதரும் பிரதமர்: ஆய்வுசெய்த துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி: பிரதமர் மோடி புதுச்சேரி வருகையையொட்டி, துணைநிலை ஆளுநர் தமிழிசை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜிப்மர் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

7. 'தேவேந்திரகுல வேளாளர்' அரசாணை வெளியிட்டாச்சு; இதற்கான நன்றி ஓட்டுச்சீட்டில்...

நெல்லை: தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுத்த பிரதமர், முதலமைச்சருக்கு வரும் தேர்தலில் ஓட்டுச்சீட்டு மூலம் நன்றி தெரிவிப்போம் என நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

8. ‘புதுச்சேரியில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ - திருமாவளவன்

சென்னை: புதுச்சேரியில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டித்து இன்று (பிப். 24) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

9. 2000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பு

சென்னை: 2,181 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுசெய்யப்பட்ட திட்டங்களைத் தீவு மைதானத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

10. வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை: தென்னக ரயில்வே அறிவிப்பு!

அஸ்ஸாம்: திபுகாரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும், வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை வரும் 27ஆம் தேதிமுதல் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details