தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 9:02 PM IST

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-9-pm-etv-bharat-tamil
top-10-news-9-pm-etv-bharat-tamil

தமிழ்நாட்டில் புதிதாக 1663 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1663 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'வாரிசு அரசியலை ஒழிப்போம்' - அமித் ஷா!

சென்னை: வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

சாகித்திய அகாதமி விருதாளர் தேவி பிரியா காலமானார்!

ஹைதராபாத் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சாகித்திய அகாதமி விருதாளர் தேவி பிரியா சனிக்கிழமை (நவ.21) காலை காலமானார். அவருக்கு வயது 69.

உயிருக்கு போராடும் அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர்!

திஸ்பூர்: கரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளது.

கரோனா சோதனையை அதிகப்படுத்துங்கள் - உள் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

டெல்லி: டெல்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மக்களிடையே ஒற்றுமையை கற்பிக்கும் வகையில் கல்வி திட்டத்தில் மாற்றம்!

டெல்லி: பல்வேறு மாநில மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டத்தை கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் தனது வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஆவின் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை : ஆவின் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கருத்துக் கேட்டு, சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - டி.ஆர். பாலு எச்சரிக்கை

சென்னை : தமிழ்நாடு காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதை நிறுத்த தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு காவல் துறை தலைவரிடம் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

‘ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரின் அனுபவம் இந்தியாவுக்கு எதிராக எனக்கு உதவும்’ - ஆஷ்டன் அகர்!

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் கிடைத்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் எனக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாதலை சமாளிக்க உதவும் நாசாவின் புதிய சாட்டிலைட்டுகள்

வாஷிங்டன்: புவி வெப்பமயமாதல் காரணமாக தொடர்ந்து உயரும் கடல்மட்டத்தை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இரண்டு செயற்கைக்கோள்களை ஏவவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details