தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 AM
9 AM

By

Published : Feb 25, 2021, 9:14 AM IST

1. களம் திமுகவிற்குச் சாதகமாக உள்ளது - துரைமுருகன்

தேர்தல் களம் திமுகவிற்குச் சாதகமாக உள்ளது என அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் விருப்பமனு தாக்கல்செய்த பின்பு தெரிவித்தார்.

2. அனைத்துப் பேருந்துகளும் இயங்கும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னை: அனைத்துப் பேருந்துகளும் இன்று (பிப். 25) இயங்கும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

3. சமூகநல ஆணையரக அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

சென்னை: 21 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநல ஆணையரக அலுவலகக் கட்டடம், பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

4. நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 25) தமிழ்நாடு வருகிறார்.

5. அஜித் ரசிகர் திடீர் தற்கொலை!

அஜித் குறித்த செய்திகளை வழக்கமாக ட்ரெண்டாக்கிவரும் அவரது ரசிகர்கள், தற்போது அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்த செய்தியை #ripprakashthala என்ற ஹேஷ்டாக்கில் வைரலாக்கியுள்ளனர்.

6. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 8 மாணவர்கள் கைது!

சென்னை: மதுரவாயல் புலியம்பெடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 8 மாணவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7. வழக்கறிஞர் கொலை வழக்கு: மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் வழக்கறிஞர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

8. பகலிரவு டெஸ்ட்: ரோஹித் அரைசதம்; நிதான ஆட்டத்தில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.

9. இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்லாமாபாத்: இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கைப் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. மீனவர்களுடன் கடலில் குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம்செய்து வலை வீசி மீன் பிடித்தார்.

ABOUT THE AUTHOR

...view details