தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2020, 9:28 AM IST

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-am
top-10-news-9-am

2021 தேர்தல்: சொந்த மாவட்டத்திலிருந்து இன்று பரப்புரையைத் தொடங்கும் முதலமைச்சர்!

சேலம்: வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 19) முதல் தனது சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து தொடங்குகிறார்.

ரூ.313 கோடி வங்கி மோசடி செய்த கல்வி நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் மீது 313 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: முன்னிலையாகாத மாணவி, தந்தை மீது கைது நடவடிக்கை?

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் தந்தை, மாணவி ஆகிய இருவருக்கும் இரண்டாவது முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது. இருந்தும் அவர்கள் முன்னிலையாகாததால் கைது நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தேசிய வரைவு ரயில் திட்டம் வெளியீடு!

டெல்லி: பயணிகளின் தேவைக்கு ஏற்ப போதிய இருக்கை பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையிலும் சரக்கு ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மோடி அரசு செயல்படுகிறது- ஹர்தீப் சிங் பூரி

2014இல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் சிறுபான்மையினருக்கான அணுகுமுறை அடிப்படை மாற்றத்தை அடைந்துள்ளது, தற்போது அனைத்து சமூகங்களும் சம குடிமக்களாக பார்க்கப்படுகின்றனர் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

'நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்' - ஷகிலா

எனது வாழ்வில் நான் செய்த தவறை வேறு யாரும் செய்யாதீர்கள் என்று நடிகை ஷகிலா கேட்டுக் கொண்டார்.

’மருத்துவ சிகிச்சை அடிப்படை உரிமை’ - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கரோனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருப்பது உலகப் போர் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அனைவருக்குமான மருத்துவ சேவை என்பது அடிப்படை உரிமை என கருத்து தெரிவித்துள்ளது.

பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

300 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் இந்தியா!

ரஷ்யாவின் ’ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசியை அடுத்தாண்டு இந்தியா தயாரிக்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details