தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 9:15 AM IST

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-am
top-10-news-9-am

ஓஎன்ஜிசியில் ஏற்பட்ட வாயு கசிவால் தீ விபத்து!

காந்திநகர்: சூரத் நகரில் ஓஎன்ஜிசியின் முக்கிய பைப் லைனில் ஏற்பட்ட வாயு கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

என் விருப்ப ஓய்வுக்கும் சுஷாந்த் வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - முன்னாள் டிஜிபி பாண்டே

பாட்னா : டிஜிபி பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்றதற்கும், இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே கூறியுள்ளார்.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி அளிக்கக் கோரிய மனு - விசாரணை ஒத்திவைப்பு!

டெல்லி : கரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பாக முன்பதிவாகி ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் முழு கட்டணத்தைத் திரும்ப அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்

கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்.

புதுச்சேரியில் வெடிகுண்டுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது!

புதுச்சேரி : வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்த மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நிலத்தை அபகரிக்க முயற்சி: சசிகலாவின் சகோதரருக்கு பிடிவாரண்ட்

தஞ்சாவூர்: நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் உள்பட 11 பேர் மீது திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : விபத்துக்களில் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை என்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

சென்னை : சனிக்கிழமை விடுமுறை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு கியூஆர் கோடு தெரிவிக்க உத்தரவு!

சென்னை : ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் உள்ள ’க்யூ ஆர்’ கோடை பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 10 இடங்களில் கத்திமுனையில் வழிப்பறி : பொதுமக்கள் அச்சம்!

சென்னை : ஒரே நாளில் 10 இடங்களில் கத்தி முனையில் நடந்த வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details