தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம் - 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 29, 2021, 5:53 PM IST

1. கரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு - ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்!

கரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2. 'தமிழ்நாட்டில் இனி மின் தடையே இருக்காது' அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் இனி மின் தடையே இருக்காது என்றும், பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

3. பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. யூடியூபர் மதன் மனைவிக்கு ஜாமீன்

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவு!

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை புதன்கிழமை டெல்லியில் கூடுகிறது. அப்போது, கோவிட் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

7. 59 சீன செயலிகளுக்கு ஆப்பு- ஓராண்டு நிறைவு!

சிறுவர்களின் உயிரோடு விளையாடிய பப்ஜி, பல குடும்பங்களில் பிரச்சினையை ஏற்படுத்திய டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இன்றுடன் ஓராண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த 59 சீன செயலிகள் என்னென்ன என்பது குறித்தும் பார்ப்போம்.

8. ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள்

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள இந்திய விமான படைத்தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அறையை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

9. நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!

நடிகர் அர்ஜூன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

10. அக்டோபரில் தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை திருவிழா!

டி20 உலகக்கோப்பை 2021 ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details