தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம் - 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 24, 2021, 2:59 PM IST

1. 'போஸ்ட் கோவிட் கிளினிக்' - கரோனாவிலிருந்து மீண்டுவர்களுக்கு புதிய திட்டம்

கரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் போஸ்ட் கோவிட் கிளினிக் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

3. அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

4. நெல் கொள்முதலை அரசு விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ்

நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படாததால் உழவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

5. 'பகட்டு காட்டியதில்லை... பழிகள்தான் உந்துதல்' - ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்!

”கருணாநிதியின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை. என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் தான், நான் மேலும் உழைக்க உந்துகின்றன” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

6. உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக்காலத்தை ஆறு மாதம் நீட்டிப்பு செய்யும் சட்டமுன் வடிவு நிறைவேற்றம்

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன் வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

7. சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8. டெல்லியில் பிரதமர் ஆலோசனை... காஷ்மீரில் இணையம் முடக்கமா?

பிரதமரின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தின்போது, காஷ்மீரில் இணையம் துண்டிக்கப்படும் என பரவிய வந்ததிக்கு, ஐஜி விஜய் குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

9. கால்பந்து மெஜிசியன் மெஸ்ஸிக்கு பிறந்தநாள்

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இன்று தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

10. தனுஷ் பட தயாரிப்பாளரின் புது முயற்சியால் ரசிகர்கள் குஷி!

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ படப்பிடிப்பைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு ஜூம் மீட்டிங் மூலமாகத் திரையிட உள்ளதாக ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details