தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பண்ணைப் பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை! - கூட்டுறவுத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால், கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

minister
minister

By

Published : May 20, 2022, 10:43 PM IST

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால், தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 65 பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சதத்தை நெருங்கும் தக்காளி விலை!

ABOUT THE AUTHOR

...view details