சென்னை:தமிழ்நாட்டில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. மேலும் புதிதாக 962 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 19 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 878 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 962 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 394 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 5 ஆயிரத்து 548 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 1,078 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 360 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 13 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 176 என உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக 105 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 150 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்:
சென்னை மாவட்டம் - 554981
கோயம்புத்தூர் மாவட்டம் - 247121
செங்கல்பட்டு மாவட்டம் - 172033
திருவள்ளூர் மாவட்டம் - 119467
ஈரோடு மாவட்டம் - 104506
சேலம் மாவட்டம் - 100071
திருப்பூர் மாவட்டம் - 95608
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 77634
மதுரை மாவட்டம் - 75247
காஞ்சிபுரம் மாவட்டம் - 75059
தஞ்சாவூர் மாவட்டம் - 75467
கடலூர் மாவட்டம் - 64135
கன்னியாகுமரி மாவட்டம் - 62419
தூத்துக்குடி மாவட்டம் - 56337
திருவண்ணாமலை மாவட்டம் - 55017
நாமக்கல் மாவட்டம் - 52386
வேலூர் மாவட்டம் - 49917