சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நவம்பர் 12, 13ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கம்ப்யூட்டர் மூலமான எழுத்துத் தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான கம்ப்யூட்டர் வழித் தேர்வு நவம்பர் 12, 13 தேதிகளில் 6 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.