கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு, கடந்த நவம்பர் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 நபர்கள், முதல் 100 தரவரிசையில் முன்னிலை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு, தேர்வர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது .
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதிய 2,840 பேரில் 262 பேர் வெளி மாவட்டத்தினர் என்று தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 57 பேரில், 40 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.