தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரூப் 2,2ஏ தேர்வு: தற்காலிக ஆன்சர் கீ வெளியீடு - tnpsc objections on Answer key

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 and 2A Answer key released
TNPSC GROUP 2 and 2A Answer key released

By

Published : May 28, 2022, 8:25 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் அதாவது 84.44 விழுக்காடு பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவது இயல்புதான்" என்று தேர்வுக்கு பின்னர் டிஎன்பிசி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார். தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் 27ஆம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுகளின் தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள நிலையில், ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும் என பாலசந்திரன் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு - மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

ABOUT THE AUTHOR

...view details