சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டு, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சரானார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரவி, இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதலமைச்சரை சந்தித்த எஸ்.எஸ்.சிவசங்கர் - எஸ்.எஸ். சிவசங்கர்
போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்ட எஸ்.எஸ். சிவசங்கர், அத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
எஸ்.எஸ்.சிவசங்கர்
இந்நிலையில் போக்குவரத்துத்துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்ட எஸ்.எஸ். சிவசங்கர் இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதையும் படிங்க: Video:அமைச்சரை வேறு துறைக்கு மாற்றியது தண்டனை ஆகாது - செல்லூர் ராஜூ 'பொளேர்' பேட்டி