தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணியின்போது மது அருந்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை - தமிழ்நாடு போக்குவரத்து துறை எச்சரிக்கை

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்தியபடி பேருந்து இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 8, 2022, 11:06 AM IST

சென்னை: இதுதொடர்பாக அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியில் ஒருங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியை தடை செய்து அவசர சட்டத்தை அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details