புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 5,600க்கும் மேற்பட்டோர் மீது 17 (பி) விதியின் கீழ் அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களையும் சேர்த்துக்கொள்வதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க...'கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!'