தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

By

Published : Feb 2, 2022, 7:49 PM IST

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் பொருட்டு உரிமங்களுடன் வைத்துள்ள 22,000 துப்பாக்கிகளை உடனடியாக தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை
காவல்துறை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனால் பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவதற்காகவும், காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை

இந்த நிலையில் தேர்தல் சமயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தற்காலிகமாகக் காவல் நிலையங்களில் ஒப்படைப்பது வழக்கம்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், முக்கிய வி.ஐ.பிக்கள், நடிகர்கள், முன்னாள் ராணுவ அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் அவர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள்.

துப்பாக்கிகள் ஒப்படைப்பு

காவல் துறை அனுமதியோடு உரிய உரிமம் பெற்று வாங்கப்படும் இந்தத் துப்பாக்கிகள் காவல் துறை கேட்கும்போது கொண்டு வந்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிமம் பெற்று வைத்துள்ள 22,000 துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

அதே போல சென்னையைப் பொறுத்தவரை, உடனடியாக 2700-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details