தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறுக - ஸ்டாலின்' - மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை திரும்பப் பெறுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK stalin statement latest
TN opposition leader stalin urges govt. to withdraw petro, Diesel price hike

By

Published : May 4, 2020, 11:45 AM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா காலத்திலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா?

இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்!

எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details