தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை - மாதிரி பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 7, 2022, 10:37 PM IST

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அதனால் மதிப்பெண் குறைந்து இடம் கிடைக்காது என்ற காரணத்தினால் கடந்த காலங்களில் மாணவர்களின் தற்கொலைச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத்தவிர்க்கும் வகையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் ஏற்கெனவே, மன நல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வினால் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் உயர் கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துக்கொள்வதற்கான மனநல ஆலோசனைகள் இன்று (செப்.7) வழங்கப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி பள்ளியில் நீட் மற்றும் போட்டித் தேர்விற்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மாதிரி பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் விமலா கூறும்போது, 'நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. மேலும், அவர்களுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது' எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை

இதையும் படிங்க: பண்டிகை கால நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி, தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details