தமிழ்நாடு அரசியல் களம் சிறிது காலம் பரபரப்பு காட்சிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இருந்தாலும் எம்.எல்.ஏ.க்களை நினைத்து எடப்பாடி கலக்கத்தில்தான் இருக்கிறார் என்று வெளியான தகவல், தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு எடப்பாடிதான் காரணம் என ஓபிஎஸ் அவர் மேல் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகும் செய்தி, அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் பேட்டி என மீண்டும் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர்! - டெல்லி செல்லும் பன்வாரிலால் புரோஹித்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.
banwarilal
இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடியையும், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருக்கிறார்.
அப்போது இங்கு நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.