தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி காலையில் சென்றார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகையிலேயே தனிமைபடுத்திக்கொள்ள மருத்துவமனை அறிவுரை வழங்கியது.
கரோனாவிலிருந்து பூரண குணமடைந்த ஆளுநர்! - பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா இல்லை
16:51 August 14
சென்னை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக, காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, ராஜ்பவனில் ஆளுநர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, அவரை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர். காவிரி மருத்துவமனை இன்று(ஆகஸ்ட்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
ஆளுநரின் ஒத்துழைப்பு மற்றும் மன உறுதியால் விரைவாக அவர் குணமடைந்து, மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். அவர் நலமுடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் பட்டியல் வெளியீடு...!