தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய உத்தரவு! - கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Jun 15, 2022, 7:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என‌ தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில்
மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து கொண்டு வழிபாடு செய்யவோ அல்லது கோயில்களின் வாயில்களில் உட்காரவோ போதுமான வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோயில்களில் சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்
கோயிலில் உள்ள வசதிகள், கோயில் நுழைவு வாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் விரைவில் அமைக்க வேண்டும் என்று திருக்கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதையும் படிங்க:'என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான்' - திண்டுக்கல் சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details