தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்த நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

நிதித்துறைச் செயலாளர்
நிதித்துறைச் செயலாளர்

By

Published : Aug 14, 2021, 1:39 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், காகிதமில்லாத முறையில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், " இந்த நிதிநிலை அறிக்கை கடுமையான சூழலில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகும். கரோனா சூழலால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவு, புதிதாக பதவியேற்றுள்ள அரசு என பல நெருக்கடியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் காலத்தில் நிர்வாகம் மற்றும் ஆளுமை எவ்வாறு அமையும் என முன்னோடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்வது, அரசின் சொத்துக்களை நிர்வகிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

மூலதனத்தை பெருக்க நிதி

முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட மக்களின் தேவைக்கு ஏற்ற திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக நிதிநிலை அறிக்கையே என்றும், நிலையை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மூலதனத்தை பெருக்க கூடுதல் நிதி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதை செய்ய இயலும், எவ்வாறு செய்ய இயலும் என ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடிக்கும் மேலான இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதனை ஒப்பிடுகையில் டீசல் வாகனங்கள் குறைவு என்பதாலே, அதற்குரிய வரிகுறைப்பு அவசியமில்லை என்றே தற்போது டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை.

டாஸ்மாக் வருமானத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 4-5 விழுக்காடு குறைவாகும். கடைகள் குறைப்பு, பார்கள் திறக்கப்படவில்லை போன்ற காரணங்களால் வருவாய் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நுகர்வு குறைந்துள்ளது. அதனை வரி உயர்த்தி வருவாயை சரி செய்திருக்கிறோம்.

நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்படும் ஆண்டு வருமானம் 23,000 கோடி கிடைப்பதாக தெரிவித்தார். பெட்ரோல் மீதான மூன்று ரூபாய் வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஒட்டுமொத்த செலவினங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்காக வாங்கப்படுகிறது என கூறமுடியாது. அவை தவிர்த்து அரசுக்கு செலவினங்கள் உள்ளன.

அனைத்து குடும்ப அட்டைதார பெண்களுக்கும் உரிமை பணம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பாக அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படாது. மேலும் 2011-2012 இல் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக்கோடு சரியாக பின்பற்றவில்லை என்று தெரிவித்தார். இதற்காக ஏழ்மையை கண்டறிய குழு அமைக்கப்படும்.

இந்த ஆண்டு 92 ஆயிரத்து 484 கோடி கடன் வாங்க உத்தேசித்துள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களில் நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கலுக்கான செலவினங்களை மாநில அரசு 40%, ஒன்றிய அரசு 60% என்ற அடிப்படையில் மேற்கொண்டுள்ளன. அரசியலைமைப்பு சட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒன்றிய அரசு என்பதையே கூறினேன். அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்கிறது.

வறுமைக்கோடு முறையை நாம் தற்போது பின்பற்றுவதில்லை. நியாயமான தகுதியான நபர்களைக் கண்டுபிடித்து ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கரோனா காரணமாக அரசுப்பேருந்துகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலும் பின்தங்கிய மக்களே அதிகளவில் பயணம் செய்பவர்களாக உள்ளனர்.

விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறைபாடு போன்ற காரணங்களுக்காக எல்லா நாடுகளிலும் பொதுபோக்குவரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details