தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசின் அடுத்த அதிரடி - கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா!

2GB data free for college students, free data for college students, free net, இலவச நெட், இலவச புரவுசிங், இலவச டேட்டா, தமிழ்நாடு அரசு ஆணை, tn government latest order, tn government free date order
tn government 2gb free date order for college students

By

Published : Jan 10, 2021, 9:09 AM IST

Updated : Jan 10, 2021, 10:10 AM IST

09:01 January 10

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதி வரை தினசரி 2 ஜிபி மொபைல் டேட்டா இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும் என்று அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினசரி 2 ஜிபி மொபைல் டேட்டா இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 விழுகாட்டிலிருந்து, 49 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி இணைய டேட்டா  (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசால் வழங்கப்படும் விலையில்லா டேட்டாவை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jan 10, 2021, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details