இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரிசோதனைக்காக, சென்னையில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,257 பேருக்கு கரோனா! - tn corona update
18:10 November 09
தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,257 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2,308 பேர் குணமடைந்தனர். 18 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 74 ஆயிரத்து 508 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2,257 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மொத்தமாக இதுவரை தமிழ்நாட்டில், 1 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 803 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்மூலம் 7 லட்சத்து 46 ஆயிரத்து 79 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பேது 18 ஆயிரத்து 825 பேர் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்று மேலும் 2,257 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,308 பேர் குணமடைந்தனர். 18 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 079ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரத்து 892ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 362ஆகவும் உயர்ந்துள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 585 பேர், செங்கல்பட்டில் 113 பேர், கோயம்புத்தூரில் 189 பேர், சேலத்தில் 105 பேர், திருவள்ளூரில் 125 பேர், திருப்பூரில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா மூன்றாவது அலை? ஆபத்தில் டெல்லி!