தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெ. பிறந்தநாள் விழா: மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கிவைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: மரக்கன்று நடும் திட்டம் தொடக்கி வைத்த முதலமைச்சர்!
ஜெயலலிதா பிறந்த நாள் விழா: மரக்கன்று நடும் திட்டம் தொடக்கி வைத்த முதலமைச்சர்!

By

Published : Feb 24, 2021, 1:13 PM IST

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் வனத் துறை சார்பில் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரக்கன்றை நட்டு தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

மரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைத்த முதலமைச்சர்!

பின்னர், சமூக நலத் துறை சார்பில் தேசிய பெண் குழந்தை நாள் விருது, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது குறித்து விருதுபெற்ற மாணவி கூறுகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வித் தகுதி பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...1971 போர் வெற்றியை பறைசாற்றும் வகையில் விமான படையின் சாகசம்!

ABOUT THE AUTHOR

...view details