குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி! - தீபாவளி ஸ்பெஷல்
சென்னை: தீபாவளி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு ஆளுநர் ஆகியோருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (நவ.14) தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும்,
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு ஆளுநர்
பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து, தனித்தனியாக மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.