தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேகதாது அணை: மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்! - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சென்னை: "மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்" என்று, வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

cm

By

Published : Jul 10, 2019, 4:45 PM IST

Updated : Jul 10, 2019, 5:36 PM IST

அந்த கடிதத்தில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை விஷயத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டின் வாதத்தை கேட்க வேண்டும் என்று கடந்த மாதம் 24ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால் தற்போது மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சகம், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் நடவடிக்கைகள் காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. இதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jul 10, 2019, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details