சென்னை : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழ்நாட்டிற்கு பாதிப்பு
12:38 July 09
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய பதில் கடிதத்தில், அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அணை கட்டும் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில். தமிழக விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையிலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூலை 12-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் பங்கேற்குமாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க :மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்