தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இன்று அனைத்து துறை செயலர்களுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அனைத்துத் துறை செயலர்கள், துறைத் தலைவர்கள் என அனைத்து அலுவலர்களும் காலை 10 மணிக்குள் தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த உத்தரவானது அவர்களின் கீழ் இயங்கும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
'காலை 10 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்' -தலைமைச் செயலாளர் அதிரடி! - தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
சென்னை: அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் என அனைவரும் காலை 10 மணிக்குள் தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
secretariat
உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷாவும் இதேபோல் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்து, இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறார். மேலும் பணிகள் அனைத்தையும் அலுவலகத்தில்தான் முடிக்க வேண்டும் என்றும், அரசு கோப்புகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றும் கறார் உத்தரவு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.