தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடைமேடையிலிருந்து தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி! - சிறுவன் பலி

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரயிலில் அடிபட்டு சிறுவன் பலி

By

Published : Apr 29, 2019, 2:46 PM IST

சென்னை மாதப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால். இவரது மகன் ஆதித்யா ( 9). இச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருண் கோபால் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க சிறுவன் ஆதித்யாவுடன் சென்னை தி. நகருக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மாதப்பாகத்திற்கு மின்சார ரயிலில் செல்வதற்காக மாம்பலம் ரயில் நிலையம் வந்தார்.

அப்போது அங்கு ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, சிறுவன் ஆதித்யா நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது,
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயிலில் தவறி விழுந்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆதித்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர் கண்ணெதிரே 9 வயது சிறுவன் ரயிலில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details