தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜோதிடம் மீது இருந்த நம்பிக்கையால் வேட்பு மனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்: வி.பி. துரைசாமி - தேர்தல் 2021 பாஜக வேட்பாளர்கள்

சென்னை: ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்ததாலும், நேற்று நல்ல நாள் என்பதாலும் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறினார்.

tn bjp vice president vp duraisamy
பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி

By

Published : Mar 13, 2021, 6:22 PM IST

பாஜக சார்பில், 'உங்கள் விருப்பம், எங்கள் அறிக்கை' என்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி கட்சி தலைமையகமான கமலாலயத்தில் இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் வி. பி.துரைசாமி,

நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் ஏன்?

"ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவர் என்பதாலும், நேற்று நல்ல நாள் என்பதாலும் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை இருந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை.

திமுக பாஜக நேரடியாக 14 இடங்களில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு,

நான் முன்னரே கூறியது போல, இனி வரும் காலங்களில் திமுக - பாஜக இடையேதான் போட்டி இருக்கும். இது ஆரோக்கியமானதாக இருக்கும்" என பதில் அளித்தார்.

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு,

அது திமுகவின் விருப்பம், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு கூறினார் வி.பி. துரைசாமி

முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்

அதிமுக கூட்டணியில், 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (மார்ச் 12) தொடங்கிய நிலையில், திருநெல்வேலி தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன்.

இந்த விவகாரம் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி.

இதையும் படிங்க: 'அரசின் புதிய அறிவிப்புகள் திமுக வெற்றியை பாதிக்காது' - வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஈஸ்வரன்!

ABOUT THE AUTHOR

...view details