சென்னை:கடந்த தினங்களாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்பு ஆகியவற்றைச்சார்ந்தவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இது தொடர்பாக இன்று (செப்.25) ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், "கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.