2020-2021ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், ”வருகிற 17ம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடத்தப்படும். 18ஆம் தேதி இரண்டாம் நாள் பொது விவாதம் தொடரும். 19ஆம் தேதி மூன்றாம் நாள் பொது விவாதமும், 20ஆம் தேதி காலை 10 மணியளவில் வழக்கம்போல் சட்டப்பேரவைக் கூடி எதிர்க்கட்சியினரின் பதிலுரை தொடரும்” என்றும் தெரிவித்தார்.