தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7.5 விழுக்காடு இடஒதுக்கீடு; அரசு பள்ளியில் பயின்ற பொறியியல் மாணவர்களுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு

தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டண நிதி ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Nov 15, 2021, 9:44 PM IST

Tamilnadu
Tamilnadu

சென்னை: பொறியியல் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்குவதற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் உடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்கள் ஆன கல்வி கட்டணம் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்தார்.

7.5 சதவீதம் முன்னுரிமை
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்டத்தின் மூலம் 7.5% இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒதிக்கீடு வழங்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவிகள்
2021- 22 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் 7 ஆயிரத்து 876 பேர் சேர்ந்துள்ளனர். 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான படிப்புக் கட்டணம் விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கான படிப்பு கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகள் நடத்தும் சுயநிதி பாட பிரிவுகளுக்கும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பாடப்பிரிவுகளுக்கான படிப்பு கட்டணங்கள் கல்வி கட்டண நிர்ணயம் செய்த படி கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

கல்விக் கட்டணம்

2021-22 ஆம் கல்வி ஆண்டில் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு 50 ஆயிரமும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 55 ஆயிரமும், ஒருமுறை பெறப்படும் வளர்ச்சி நிர்வாக நிதியாக 5000 வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணம் கல்வி கட்டணக்குழு நிர்ணயித்துள்ள தொகை வழங்கப்படும்.
விடுதிக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் விடுதி கட்டணமாக வழங்கப்படும். இதில் கல்லூரி வசூலிக்கும் விடுதி கட்டணம் குறைவாக இருந்தால் அந்தத் தொகை வழங்கப்படும். போக்குவரத்து கட்டணமாக பேருந்துகளை பயன்படுத்தும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் அல்லது கல்லூரி வசூலிக்கும் பேருந்து கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை வழங்கப்படும்.
கட்டணம் வசூலிக்க தடை
அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் எந்தவித கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. மாணவர்களிடம் திருப்பி வழங்கக்கூடிய வைப்புத்தொகை கட்டணம் நூலக கட்டணம் மற்றும் உணவு விடுதி காப்பு தொகை கட்டணம் போன்றவற்றையும் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் 7.5% முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குறை தீர்ப்பதற்கு குறை தீர்ப்பு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவர்கள் பிறப்பைப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ரூ.75 கோடி ஒதுக்கீடு
2021-22ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்காக 74 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Anna University Semester exam: டிச.13ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details