தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு அரசிற்கு திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை! - திரையரங்கு உரிமையாளர்கள்

திரையரங்கு உரிமையாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை
திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை

By

Published : Jan 6, 2022, 9:12 AM IST

சென்னை: திரையரங்கு உரிமையாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஜனவரி 5ஆம் தேதி, கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆடியோ பதிவு மூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை

அதில், "மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம். இந்தக் கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு என்றாலே முதலில் திரையரங்குகள் தான் மூடப்படுகின்றன.

தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்

திரையரங்குகளில்தான் கரோனா பரவுவதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. ஆனால் முதலில் திரையரங்குகளைத்தான் மூடவேண்டும் என்கின்றனர். ஆனால், இதுவரை அரசு எந்தவொரு சலுகையும் எங்களுக்கு அளிக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் தமிழ்நாட்டில் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை" என்று கூறப்பட்டிருந்தது

மேலும், அவர் அந்த ஆடியோவில் "திரையரங்குகளை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசு எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்றால் யாரும் புதுப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள், மக்களும் வரமாட்டார்கள்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை அழைத்துப்பேசி சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details