சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் சந்திப்பில், தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் சென்னை தியாகராயநகர் சித்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சாமிவேல் (50) என்பதும்; இவர் தனியார் மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.