சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அனுப்பி வந்தனர். இந்தக் கோரிக்கை மனுக்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படுவதால், விண்ணப்பிக்க தெரியாதவர்கள் நேரடியாக மனு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கோரிக்கை மனுக்கள் இன்று(ஜூன்.28) முதல் நேரடியாக பெறப்பட்டுவருகின்றன.
தியாகராஜ பாகவதர் பேரன் சாய்ராம் அந்த வகையில், எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரன் சாய்ராம், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு வீடு வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் குடும்பத்தில் மொத்தம் 4 பேர் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம்.
வீட்டின் வாடகை கூட கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கோரிக்கை மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கல்லூரி மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை