தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தை விற்ற மூவர் கைது

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை விற்றதாக உரிமையாளர் உள்பட மூவரை மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தை விற்ற மூவர் கைது
வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தை விற்ற மூவர் கைது

By

Published : Nov 7, 2021, 9:16 AM IST

சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வரி வசூல் அலுவலராகவுள்ள ஜெயலதா மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கணபதி சுப்பிரமணியம் என்பவர் 2011 -2014 ஆம் ஆண்டு வரையில் 4 கோடியே 24 லட்சத்து 93ஆயிரத்து 418 ரூபாய் வருமான வரி செலுத்தாத காரணத்தினால் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை.

இதனால் அவருக்குச் சொந்தமாக சோழிங்கநல்லூரிலுள்ள இடத்தினை கடந்த 2017ஆம் ஆண்டு முடக்கி நீலாங்கரை சார்பதிவாளருக்குக் கடிதம் மூலம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தின் தற்போது நிலவரத்தைப் பார்த்தபோது கணபதி சுப்பிரமணியம் பவர் ஏஜெண்ட் சுனில் ஜெயின் மூலமாக சஞ்சய் என்பவருக்கு நிலத்தினை விற்பனை செய்தது தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

அதற்கு நீலாங்கரை சார்பதிவாளர் ஆறுமுகம் நவராஜ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். போலி ஆவணங்களைத் தயார் செய்து இடத்தினை விற்றதாக இடத்தின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் (44), ஏஜெண்ட் சுனில் ஜெயின் (54), சஞ்சய் (34) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்து வரக்கூடிய சார்பதிவாளர் ஆறுமுகம் நவராஜ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி கணக்கை ஹேக் செய்த சொந்த கட்சி நிர்வாகி கைது!

ABOUT THE AUTHOR

...view details