தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது - சென்னையில் 80 ஆயிரம் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Chennai arrest
Chennai arrest

By

Published : Jan 13, 2021, 11:16 AM IST

சென்னை:சென்னையின் பல்வேறு பகுதிகளில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியிலிருந்து போதைப் பொருள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட ராயப்பேட்டை காவல் துறையினர், இருச்சகர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூவரை பிடித்து சோதனைச் செய்தனர்.

அப்போது, அவர்களிடம் விலையுர்ந்த போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (36), சிசிடிவி டிசைனரான சித்திக் அகமத் (33) மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ஜிலானி (19) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் இளையான்குடி பகுதியிலிருந்து மெத்தாம்பேட்டமைன் என்று அழைக்கக்கூடிய போதைப்பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்து சென்னையில் அமைந்துள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி உள்ளவர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து அவரிடமிருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 65 கிராம் போதைப்பொருட்கள், எடை மெஷின், மூன்று செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த போதைப் பொருள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'அமித் ஷா கிட்ட சொல்லி மதக்கலவரம் பண்ணிடுவேன்': சிக்கன் ரைஸால் சிக்கலில் மாட்டிய பாஜக நிர்வாகி

ABOUT THE AUTHOR

...view details