சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் சாலை அருகே நள்ளிரவு 1 மணியளவில் மூன்று பேர் தகராறில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அதனைக் கண்ட பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள் மூவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "அவர்கள் மூவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் பாண்டே (37), தினேஷ் பத்ரா (20), ராஜேஷ்குமார் மதன் (29) என்பதும், போலி நுழைவு இசைவு மோசடியில் தகராறு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, விசா இடைத்தரகரான மதன், தன்னிடம் நுழைவு இசைவு கேட்டுவரும் வாடிக்கையாளர் பலரிடம் பணத்தைப் பெற்று, அதனை நுழைவு இசைவு முகாவாண்மை நடத்திவரும் ராஜேஷ் குமார் பாண்டே, தினேஷ் பத்ரா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான நுழைவு இசைவு தயாரித்து கொடுத்துள்ளனர்.
மதனும் இது தெரியாமல் வாடிக்கையாளர்களிடம் போலி நுழைவு இசைவு கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் போலி இசைவு என்பதை அறிந்து மதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக நள்ளிரவில் மூவரும் வாக்குவாதம், கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:குமரியில் போலி விசா தயாரித்தவர் கைது