சென்னை:வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநராக செந்தில் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று(செப்.18) இரவு 11 மணி அளவில் தனது குடும்பத்தோடு வெளியே சென்றுவிட்டு தனது வீடு அருகே காரை நிறுத்தும் போது குடிபோதையில் அங்கு வந்த நான்கு இளைஞர்கள் அந்த கார் மீது காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபோதையில் காவலரை தாக்கிய மூவர் கைது - Vannarapetta Deputy Commissioner car driver
சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர்
இதனை, காவலர் தட்டி கேட்கவே அவரை கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இதில் காயமடைந்த செந்தில் குமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருவொற்றியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய நால்வரை தேடிவந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் கே.வி.கே குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோசப், பிரபு (எ) மணிகண்டன், கந்தவேல் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகி உள்ள டேவிட்டை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் - சுரேஷ் கண்ணன்