சென்னை:பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,
'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 703 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 797 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 91 லட்சத்து 81ஆயிரத்து 377 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 233 நபர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 908 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 39 ஆயிரத்து 540 என உயர்ந்துள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 31 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 24 ஆயிரத்து 159 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 209 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் பரவல் விழுக்காடு அதிகரித்து 0.9 என்று பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூரில் 11 ஆயிரத்து 720 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 206 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவாக நான்கு நபர்களுக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 247 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,41,809
கோயம்புத்தூர் - 2,33,442
செங்கல்பட்டு - 1,64,059
திருவள்ளூர் - 1,14,959
சேலம் - 95,171
திருப்பூர் - 89,363
ஈரோடு - 96,726
மதுரை - 73,834
காஞ்சிபுரம் - 72,386
திருச்சிராப்பள்ளி - 73,666
தஞ்சாவூர் - 69,749
கன்னியாகுமரி - 60,654
கடலூர் - 61,669
தூத்துக்குடி - 55,338
திருநெல்வேலி - 48,268
திருவண்ணாமலை - 52,898
வேலூர் - 48,536
விருதுநகர் - 45,672
தேனி - 43,107
விழுப்புரம் - 44,413
நாமக்கல் - 48,168
ராணிப்பேட்டை - 42,318
கிருஷ்ணகிரி - 41,825
திருவாரூர் - 38,598
திண்டுக்கல் - 32,385
புதுக்கோட்டை - 28,756
திருப்பத்தூர் - 28,457
தென்காசி - 26,972
நீலகிரி - 31,342
கள்ளக்குறிச்சி - 29,762
தருமபுரி - 26,563
கரூர் - 22,949
மயிலாடுதுறை - 21,543
ராமநாதபுரம் - 20,144
நாகப்பட்டினம் - 19,273
சிவகங்கை - 19,160
அரியலூர் - 16,153
பெரம்பலூர் - 11,623
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1020
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1080
ரயில் மூலம் வந்தவர்கள் - 428