தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு' - திருமாவளவன் - thol thirumavalavan tweet

புத்த பூர்ணிமா வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் செய்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு என்று கூறியுள்ளார்.

thol thirumavalavan tweet Buddha Purnima
thol thirumavalavan tweet Buddha Purnima

By

Published : May 26, 2021, 11:02 PM IST

புத்தர் ஞானம் பெற்ற தினம் புத்த பூர்ணிமாவாக இன்று(மே 26) அனுசரிக்கப்படுகிறது. பவுத்தர்களுடைய முக்கிய நாளான புத்த பூர்ணிமா, ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

இந்நாளின் மூன்று சிறப்புகள்:

1. புத்தர் பிறந்த தினம்

2. புத்தர் ஞானம் அடைந்த தினம்

3. புத்தர் பரிநிப்பாணம் அடைந்த தினம்

சமத்துவப் பேரொளி புத்தர்

புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்:

  • துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது.
  • ஆசையே மக்களின் துக்கத்திற்குக் காரணம்.
  • துன்பத்தைத் தடுக்க ஆசையைத் துறப்பதே ஒரே வழி.
  • நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் இவையெல்லாம் துக்கத்தைப் போக்கும் வழிமுறைகள்.
    பூத்த பூர்ணிமா வாழ்த்துகள்

இந்நிலையில் புத்த பூர்ணிமா தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு. சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவையே பௌத்தக் கோட்பாடு. சமத்துவப் பேரொளி பெருமகான் கௌதமபுத்தரின் பிறந்த, ஞானமடைந்த, மறைந்த நாளான இந்நாளில் யாவருக்கும் இனிய புத்தபூர்ணிமா வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details