தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திரும்பிப்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - பாண்டிச்சேரி

இயக்குநர் இப்ராஹீம் இயக்கத்தில் உருவான திரும்பிப்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

திரும்பிப்பார்
திரும்பிப்பார்

By

Published : Aug 14, 2022, 10:05 PM IST

பவி வித்யா லட்சுமி புரடக்க்ஷன்(Production ) கிரிதயாரிப்பில் "கொம்பு" திரைப்படத்தின் இயக்குநர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் 'திரும்பிப்பார்'.

வித்யா பிரதீப்,ரிஷிரித்விக், ராஜ்குமார், பிக்பாஸ் டேனி,நாஞ்சில் சம்பத் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனே அஸ்வின், தயாரிப்பாளர் CV குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர்கள் விக்ரம் பிரபு , மஹத், நடிகை யாஷிகா ஆனந்த், சாந்தினி மற்றும் பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட "நிழல் நடை" ( Shadow Walk) என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்தன. BMD சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் ஒளிப்பதிவு சக்திப்பிரியன், படத்தொகுப்பு பி.ஆர்.பிரகாஷ், ஸ்டன்ட் ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார், ஆடியோ கிராபர் விபி.சுவேதன், மேக்கப் சசிகலா, தயாரிப்பு நிர்வாகம் இரா.சரவணன், ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் டீசர்,டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு குறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதையும் படிங்க:காட்சிக்கூராய்வு, ஓர் உன்னதமான துரோகம்...

ABOUT THE AUTHOR

...view details