இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மூவரையும் பழிவாங்கும் நோக்கோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவி சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்பவர்களை கைது செய்து தண்டிக்க முன்வராத தமிழக அரசு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரை தண்டித்திருப்பது, தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.