தமிழ்நாட்டில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக வேலூரிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ளதால் மக்கள் மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? - வானிலை மையம் தகவல் - chennai meteorological department
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடலூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, மதுரை, சிவகங்கை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தேனி, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.